
பொன்.ராதாகிருஷ்ணன்
தவெகவிற்கு பாஜக எந்த நெருக்கடியும் தரவில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறையில் பாஜக அலுவலகத்தை முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார். இதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ” வரும் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 200-க்கும் மேற்பட்ட இடங்களில் பெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்க்க தமிழக வெற்றிக் கழகம் கட்சியை மத்திய அரசின் அமைப்புகளைப் பயன்படுத்தி மிரட்டுவதாக எதிர்க்கட்சிகள் கூறுவது உண்மையல்ல. தவெகவிற்கு பாஜக எந்த நெருக்கடியும் தரவில்லை. கூட்டணி அமைப்பதற்கு பாஜகவுக்கு தொண்டர்களின் பலமும், கட்சியின் கொள்கைகளும் போதும். திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் அதிருப்தியில் உள்ளன” என்று கூறினார்.



