யாரும் வராவிட்டால் விஜய் தனித்து தான் போட்டியிட வேண்டும்… ராஜேந்திர பாலாஜி!

கே.டி.ராஜேந்திர பாலாஜி

தவெகவுடன் ஒருவரும் சேரவில்லை என்றால், விஜய் தனித்துதான் போட்டியிட வேண்டும் என்று கே.டி.ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் முன்னாள் அமைச்சர் கே..டி.ராஜேந்திர பாலாஜி சந்தித்து பேசினார். இதன் பிறகு ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களிடம் கூறுகையில், தொகுதி பங்கீடு குறித்து அதிமுக பொதுச்செயலாளர் விரைவில் அறிவிப்பார்.

நடிகர் விஜய் தனித்து நிற்க விரும்பினால் நிற்கட்டும். அதிமுக சார்பில் யாரும் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. ஒருவரும் சேரவில்லை என்றால், அவர் தனித்துதான் போட்டியிட வேண்டும். அதிமுகவின் வாக்கு வங்கி குறையாது. இரட்டை இலை சின்னத்திற்கு மக்களின் ஆதரவு உறுதியாக உள்ளது. திமுக ஆட்சிக்கு எதிரான மக்களின் அதிருப்தி, அதிமுகக்கு சாதகமாக மாறும். தமிழ்நாட்டில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைவது உறுதி என்றும், அதை எடப்பாடி பழனிசாமி தலைமையில் மக்கள் எதிர்பார்க்கின்றன.

எங்கள் கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக எந்த இழுபறியும் இல்லை. மறைந்த முதல்வர் ஜெயலலிதா காலத்திலிருந்தே, அதிமுக எப்போதும் பொறுமையாக செயல்பட்டு வருகிறது. இப்போதும் அதே அணுகுமுறையை பின்பற்றுகிறது” என்றார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *