
தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் எந்த தொகுதியிலும் போட்டியிடவில்லை என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் எம்எல்ஏ அறிவித்துள்ளார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன் பண்ருட்டி தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த முறை தனிச்சின்னம், கூடுதல் தொகுதிகள் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால், அவர் கோரிக்கை ஏற்கப்படவில்லை என்று கூறி திமுக கூட்டணியில் இருந்து விலகினார். அத்துடன் தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர மாட்டேன் என்றும் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகளிடையே இணையவழி ஆலோசனை கூட்டம் இன்று (மார்ச் 25) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் பேசினார். அப்போது அவர் பேசுகையில், கட்சியில் உழைத்த முன்னணி தலைவர்களுககு வாய்ப்பு வழங்கும் வகையில் , இந்த முறை தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று அறிவித்துள்ளார்.



