
டாக்டர் ராமதாஸ்.
சட்டமன்றத் தேர்தலையொட்டி பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் 101 பக்கங்கள் கொண்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
சட்டமன்றத் தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில், பாமக நிறுவனர் ராமதாஸ், சசிகலாவின், அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அமைத்துள்ளார். இந்த நிலையில் சட்டமன்றத் தேர்தலுக்கான 101 பக்கங்களைக் கொண்ட தேர்தல் அறிக்கையை தைலாபுரம் தொட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று (மார்ச் 26) வெளியிட்டார். அந்த அறிக்கையில் மருத்துவம், வேளாண்மை, நீதித்துறை, காவல்துறை, நீர்வளம், உள்ளிட்ட பல்வேறு துறைகளின் 75 தலைப்புகளின் கீழ் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்ச்சியில் பாமக செயல் தலைவர் ஸ்ரீகாந்தி, கவுரவ தலைவர் ஜி.கே.மணி, பொதுச் செயலாளர் முரளி சங்கர், அரசியல் பிரிவு தலைவர் பேராசிரியர் தீரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ் ”ஒவ்வொரு தனி மனித வளர்ச்சியும், ஒவ்வொரு குடும்பத்தின் உயர்வும் நாட்டின் மேம்பாட்டு வளர்ச்சிக்கு உதவும் என்ற அடிப்படையில் தமிழகத்தின் வளர்ச்சிக்காக இந்த தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறேன்.
இதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழக மக்களுக்காக நான் பாடுபடுகிறேன். என் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து வெற்றி பெற செய்ய வேண்டும். இதே போல் எங்களுடன் கூட்டணியில் இணைந்து போட்டியிடும் தோழமைக் கட்சிகளுக்கும் ஆதரவு தர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இந்த தேர்தல் அறிக்கை ஒட்டுமொத்த தமிழக மக்களின் வளர்ச்சிக்கானதாக அமையும். இன்னும் சில கட்சிகள் எங்களுடன் வர வாய்ப்புள்ளது. இல்லாமலும் போகும். விரைவில் வேட்பாளர் பட்டியலை வெளியிடுவோம். கூட்டணி கட்சி தலைவி சசிகலாவுடன் கலந்து பேசி எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என முடிவுக்கு வருவோம்” என்றார். அப்போது அவரிடம் உங்கள் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற ஒரு செய்தி எழுப்பினார். அதற்கு, “நீங்களாக கூட இருக்கலாம்” என்று டாக்டர் ராமதாஸ் பதிலளித்தார்.



