நேரம் பார்த்து 12.12 மணிக்கு வேட்பாளர் பட்டியலை அறிவித்த ஜி.கே.வாசன்!

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்.

அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் தமாகா போட்டியிடும் 5 வேட்பாளர்களின் பெயர்களை ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி ஒவ்வொரு கட்சியும் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்து வருகின்றனர். இந்த நிலையில், சென்னை ஆழ்வார் பேட்டையில் தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் இன்று(மார்ச் 27) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 12,12 மணிக்குத்தான் வேட்பாளர்கள் பெயரை அறிவிப்பேன். எல்லா கட்சிகளுக்கும் ஒரு சென்டிமென்ட் உள்ளது போல தமாகாவிற்கும் உள்ளது .எனவே, அந்த நேரம் நூற்றுக்கு நூறு நல்ல நேரம்.

அதிமுக தலைமையிலான தேசிய கூட்டணியில் 5 தொகுதிகள் தமாகாவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதிகளில் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறோம். ஏற்கெனவே தாமாக தோப்பு சின்னம், ஆட்டோ, இரட்டை இலை என பல சின்னங்களில் போட்டியிட்டுள்ளது. இந்த நிலையில், சட்டமன்றத் தேர்தலில் தாமரை சின்னத்தில் தமாகா வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ராணிப்பேட்டையில் தமாகா மாவட்ட தலைவர் ஜி.எம்.கார்த்திகேயன், ஈரோடு மேற்கு தொகுதியில் மாநில பொதுச்செயலாளர் எம்.யுவராஜா, ஒட்டன் சத்திரம் தொகுதியில் மாநில துணைத்தலைவர் விடியல் எஸ்.சேகர், கும்பகோணத்தில் மாநில செயலாளர் எம்.கே.ஆர். அசோக்குமார், கிள்ளியூர் தொகுதியில் இளைஞரணி துணைத்தலைவர் டாக்டர் நிவின் சைமன் ஆகியோர் போட்டியிடுகின்றனர் என்றார். அத்துடன் தமாகா தேர்தல் அறிக்கையை ஜி.கே.வாசன் வெளியிட்டார்.

பலம் வாய்ந்த 3 திமுக அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகள் தமாகாவிற்கு ஒதுக்கப்பட்டது குறித்து ஜி.கே.வாசனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, அமைச்சர்கள் மீதும், அரசின் மீதும் மக்களிடம் அதிருப்தியிருக்கிறது. எனவே, எங்கள் வேட்பாளர்கள் அத்தொகுதிகளில் வெற்றி பெறுவார்கள் என்று பதிலளித்தார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *