மதுரையில் திடீர் திருப்பம்… மத்திய தொகுதியில் இயக்குநர் சுந்தர்.சி போட்டி!

இயக்குநரும், நடிகருமான சுந்தர்.சி

புதிய நீதிக்கட்சியின் சார்பில் மதுரை மத்திய தொகுதியில் இயக்குநரும், நடிகருமான சுந்தர் சி. போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் ஏ.சி.சண்முகம் தலைமையிலான புதிய நீதிக்கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், மதுரை மத்திய தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் இயக்குநரும், நடிகருமான சுந்தர் .சி போட்டியிடுவதாக ஏ.சி.சண்முகம் முகநூலில் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், 2026 சட்டமன்றத் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக சார்பில் புதிய நீதிக்கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள மதுரை மத்திய தொகுதிக்கு. சுந்தர் சி அவர்களை வேட்பாளராக நிறுத்துவதில் மகிழ்ச்சி கொள்கிறேன் என்று கூறியுள்ளார். மதுரை மத்திய தொகுதி திமுக சார்பில் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் வெற்றி பெற்ற தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *