கம்பம் தொகுதியில் தவெக வேட்பாளராக பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா போட்டி

பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் கம்பம் தொகுதியில் தவெக சார்பில் பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா போட்டியிடுகிறார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஓட்டலில் தவெகவின் வேட்பாளர் பட்டியலை கட்சியின் தலைவர் விஜய் இன்று (மார்ச் 29) வெளியிட்டார். அத்துடன் தமிழ்நாடு முழுவதும் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தினார். முதல் முறையாக சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் தவெக, இந்த முறை 234 தொகுதிகளிலும் தனித்து களம் காண்கிறது.

தவெக தலைவர் விஜய் திருச்சி கிழக்கு, பெரம்பூர் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். தி.நகரில் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மயிலாப்பூரில் பொருளாளர் வெங்கட்ரமணன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். மேலும் வில்லிவாக்கத்தில் ஆதவ் அர்ஜுனா, கோபிசெட்டிப்பாளையத்தில் செங்கோட்டையன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

திருச்செங்கோட்டில் அருண்ராஜ், திருப்பரங்குன்றத்தில் நிர்மல்குமார், எழும்பூர் தொகுதியில் ராஜ்மோகன், ஆர்.கே.நகரில் மரிய வில்சன், குமாரபாளையத்தில் விஜயலெட்சுமி, தூத்துக்குடியில் நடிகர் ஸ்ரீநாத், திருப்பூர் வடக்கு தொகுதியில் சத்யபாமா, ஆயிரம் விளக்கு தொகுதியில் ஜேசிடி பிரபாகர் போட்டியிடுகின்றனர்.

கம்பம் தொகுதி வேட்பாளர்

தேனி மாவட்டம், கம்பம் தொகுதியில் தவெக வேட்பாளராக புலவர் அழகர்சாமியின் மகனான பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா போட்டியிடுகிறார். கம்பத்தைச் சேர்ந்த இவர், 09.04.1976 அன்று பிறந்தவர். ஹோட்டல் மேலாண்மை மற்றும் கேட்டரிங் தொழில்நுட்பம்( IHMCT) படித்தவர். பால முத்தழகு குழுமத்தின் சேர்மனான பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ராவிற்கு பரமேஸ்வரி என்ற மனைவியும், அழகுராஜா என்ற மகனும், காயத்ரி என்ற மகளும் உள்ளனர்.

கடந்த 32 ஆண்டுகளாக தேசிய செட்டியார்கள் பேரவை நிறுவனத் தலைவராக உள்ள பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா கடந்த 2006-ம் ஆண்டு கம்பம் சட்டமன்றத் தொகுதியில் தேமுதிக வேட்பாளராக போட்டியிட்டார் நமது மக்கள் முன்னேற்றக் கழத்தின் நிறுவனத் தலைவராக உள்ள இவர் தற்போது நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் கம்பம் தொகுதியில் தவெக வேட்பாளராக போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *