
இந்தியாவில் மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பணி நாளை (ஏப்ரல் 1) தொடங்குகிறது.
இந்திய மக்கள்தொகையைக் கணக்கெடுப்பது பத்தாண்டுகளுக்கு ஒருமுறை நிகழ்ந்து வருகிறது.கடைசியாக 2011ஆம் ஆண்டு அந்தப் பணி நடைபெற்றது. அது, இந்தியா விடுதலை அடைந்த பின்னர் நடத்தப்பட்ட பிறகு இதுவரை 7 கணக்கெடுப்பு நடந்துள்ளது. தற்போது 8வது கணக்கெடுப்பு நடக்க உள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு இந்த கணக்கெடுப்பு நடந்திருக்க வேண்டும். ஆனால், அப்போது கொரோனா பரவல் காரணமாக அது தள்ளிப்போனது.
இந்த நிலையில், இந்தியாவில் புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நாளை (ஏப்ரல் 1) முதல் 2027 மார்ச் வரை முழுமையான டிஜிட்டல் முறையால் நடைபெற உள்ளது. ஒவ்வொரு வீடாகச் சென்று அவர்கள் கணக்கெடுப்பார்கள். 31 லட்சம் அதிகாரிகள் பங்கேற்கும் இந்த பணியில் வீடுகளின் நிலைமை, சமூக, பொருளாதார நிலைகள், சாதிவாரி விவரங்கள் மற்றும் 33 வகையான கேள்விகள் 16 மொழிகளில் சேகரிக்கப்படுகின்றன.
இரண்டுவிதமான பட்டியல்களை அதிகாரிகள் தயார்செய்வார்கள் என்றும் வீட்டின் நிலைமை முதல் பட்டியலிலும் குடியிருப்பாளர்கள் மற்றும் அவர்களின் பொருளியல், சமூக நிலைகள் மற்றொரு பட்டியலிலும் இடம்பெறும் என்று இந்தியாவின் மக்கள்தொகைக் கணக்கெடுப்புத் துறை ஆணையாளர் மிருதுஞ்சய் குமார் நாராயண் கூறியுள்ளார்.



