ஜோசியருக்கு அரசு பதவி… 24 மணி நேரத்தில் வாபஸ் பெற்றது தவெக அரசு

ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேலுக்கு வழங்கப்பட்ட அரசு பதவியை தவெக அரசு வாபஸ் பெற்றுள்ளது.

தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைந்து உள்ளது. புதிய அரசு பொறுப்பேற்றதை அடுத்து, பல ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருவதுடன், புதிய அதிகாரிகளும் முக்கிய பதவிகளில் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், முதலமைச்சர் விஜய்யின் அரசியல் பிரிவுக்கான சிறப்புப் பணி அதிகாரியாக ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் நியமிக்கப்பட்டார். இவர் விஜய்யின் ஜோதிட ஆலோசகராக இருந்தவர். இவருக்கு அரசுப் பதவி வழங்கப்பட்டதற்கு திமுக, மார்க்சிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கடும் விமர்சனம் செய்தன.

இந்த நிலையில், ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேலுக்கு வழங்கப்பட்ட அரசு பதவியை தவெக அரசு வாபஸ் பெற்றுள்ளது. ரிக்கி நியமிக்கப்பட்ட 24 மணி நேரத்தில் எழுந்த விமர்சனத்தையடுத்து தவெக அரசு அவருக்கு வழங்கப்பட்ட பதவியை வாபஸ் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *