
திருவாரூருக்குப் புறப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தேர்தல் பரப்புரைப் பயணத்தைத் தொடங்க, தலைவர் கலைஞர் சிறந்த திருவாரூருக்குப் புறப்பட்டுவிட்டேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான பணியில் திமுக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு தேர்தல் அறிக்கையை முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதையடுத்து தேர்தல் பிரச்சாரத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூரில் இன்று (மார்ச் 31) தொடங்குகிறார். திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூரில் இருந்து தனது தேர்தல் பரப்புரையைத் தொடங்குகிறார். திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நன்னிலம் மற்றும் மன்னார்குடி ஆகிய தொகுதிகளின் வேட்பாளர்களை ஆதரித்து அவர் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபடுகிறார்.
இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களுக்கு மலரஞ்சலி செலுத்திய புகைப்படங்களை இணைத்துள்ளார். அதில், தேர்தல் பரப்புரைப் பயணத்தைத் தொடங்க, தலைவர் கலைஞர் சிறந்த திருவாரூருக்குப் புறப்பட்டுவிட்டேன். மக்களுடன் இரண்டறக் கலக்கும் இப்பயணங்களின் வாயிலாக உங்களைச் சந்தித்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றிக்கு திராவிட மாடல் 2.0-வுக்கு ஆதரவு கேட்கிறேன். வெல்வோம் ஒன்றாக என்று பதிவிட்டுள்ளார்.



