என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா… பதவியில் இல்லாத அதிகாரிக்கு தவெக கடிதம்

உள்துறை செயலர் யாரென்று தெரியாமல் விஜய்க்கு பாதுகாப்பு கோரி தவெக இணைப்பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் எழுதிய கடிதம்
பேசுபொருளாக மாறியுள்ளது.

தவெக தலைவர் விஜய்

உள்துறை செயலர் யாரென்று தெரியாமல் விஜய்க்கு பாதுகாப்பு கோரி தவெக இணைப்பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் எழுதிய கடிதம்
பேசுபொருளாக மாறியுள்ளது.

தவெக தலைவர் விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடென உள்துறை செயலாளராக இருப்பவர் யாரென்றே தெரியாமல் எழுதப்பட்ட கடிதம் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.

சி.டி.ஆர்.நிர்மல் குமார்

தமிழக வெற்றிக் கழகத்தின் இணைப்பொதுச்செயலாளராக இருப்பவர் சி.டி.ஆர்.நிர்மல் குமார். இவர் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பியதாக இணையத்தில் உலவும் கடிதம் தான் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒய் பிரிவு பாதுகாப்பில் உள்ள தவெக தலைவர் விஜய்க்கு பிரச்சாரத்தின் போது உரிய பாதுகாப்பு வழங்க அறிவுறுத்த லேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் மத்திய அரசில் பதவியில்லாத அதிகாரிக்கு கடிதம் எழுதப்பட்ட இந்த கடிதம் தமிழக அரசியல் வட்டாரத்தில் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளாகியுள்ளது.

ஏனெனில், கடந்த 2024-ம் ஆண்டு ஜனவரி மாதத்திலேயே உள்துறை செயலாளர் பதவியில் இருந்து மாற்றப்பட்டு மணிப்பூர் ஆளுநராக நியமிக்கப்பட்ட அஜய் பல்லா, என்பவருக்கு சி.டி.ஆர்.நிர்மல் குமார் இந்த கடிதத்தை எழுதியுள்ளார். அதில், “ஒய் பிரிவு பாதுகாப்பில் உள்ள தவெக தலைவர் விஜய்க்கு, பிரசாரத்தின் போது பாதுகாப்பு குறைபாடு உள்ளது.. இந்த பாதுகாப்பில் உள்ள ஒருவருக்கு கட்டாயமாக்கப்பட்ட பாதுகாப்பு நெறிமுறைகளை செயல்படுத்தாதது கவலையளிக்கிறது. பாதுகாப்பு திட்டமிடல், செயல்படுத்தலில் குறைபாடுகள் உள்ளன. பாதுகாப்பு தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்” என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால், தற்போது அஜய் பல்லாவிற்கு பதிலாக கோவிந்த் மோகன் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த அடிப்படை தகவலைக் கூட சரிபார்க்காமல் கடிதம் எழுதப்பட்டுள்ளது சமூக வலைதளங்களில் கேலி, கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *