விஜய் பரப்புரையில் பயங்கரம்: ஆதவ் அர்ஜுனா கார் மோதி போலீஸ்காரர் படுகாயம்!

ஆதவ் அர்ஜுனா கார் மோதி காயமடைந்த போலீஸ்காரர் சதீஷ்.

ஆதவ் அர்ஜுனா கார் மோதி பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரரின் கால் எலும்பு முறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் திருச்சி கிழக்குத் தொகுதியில் இன்று (ஏப்ரல் 2) வேட்புமனு தாக்கல் செய்தார். இதன் பின் திருச்சி மரக்கடையில் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் பரப்புரை மேற்கொண்டார். இந்த பரப்புரை முடிந்து மரக்கடை பகுதியில் விஜய் கிளம்பிய போது அவரது வாகனத்தை வழக்கம் போல் அவரது
ரசிகர்களும், தொண்டர்களும் பின்தொடர்ந்தனர்.

இதில் ஒரு இடத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்திருந்த ஒரு தம்பதி நிலை தடுமாறி கீழே விழுந்தனர். அப்போது உடனடியாக விஜய் தனது பிரச்சார வாகனத்தில் இருந்து கீழே இறங்கிவந்து அவர்களைச் சந்தித்தார். விஜய் பரப்புரை முடித்து சென்றுகொண்டிருந்தபோது, அவருடன் வந்திருந்த தவெக தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச்செயலாளர்ஆதவ் அர்ஜுனாவின் காரும் சென்றது.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் சதீஷ் என்பவரின் கால் மீது ஆதவ் அர்ஜீனாவின் கார் ஏறியதாக கூறப்படுகிறது. இதில் சதீஷ் கால் எலும்பு முறிந்து பலத்த காயமடைந்தார். இந்த சம்பவம் நடந்த போது விஜய்யின் வாகனத்தில் ஆதவ் அர்ஜீனா இருந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்து நடந்தவுடன் காயமடைந்த போலீஸ்காரர் சதீஷை தவெக தொண்டர்கள் ஆம்புலன்ஸில் ஏற்றி விட்டனர். இதனைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *