தேர்தல் விறுவிறுப்பு… அனல் பறக்கும் வெயிலில் அண்ணனுக்காக களமிறங்கிய தங்கை

ஆதவ் அர்ஜூனாவின் தங்கை சீதாலட்சுமி வாக்கு சேகரிக்கிறார்.

வில்லிவாக்கம் தொகுதியில் தனது அண்ணன் ஆதவ் அர்ஜூனாவிற்காக அவரது தங்கை சீதா லட்சுமி வீடு, வீடாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தவெக தலைவர் நடிகர் விஜய், தனது கட்சி சார்பில் 234 தொகுதிகளிலும் வேட்பாளரை நிறுத்தியுள்ளார். தவெக தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா சென்னையில் உள்ள வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடுகிறார்.

அவர் கடந்த 31-ம் தேதி முதல் வில்லிவாக்கம் தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அத்துடன் தெருமுனைக் கூட்டம், பொதுக்கூட்டம் என அன்றாடம் தொகுதி முழுவதும் பிரச்சாரத்தை விரிவுபடுத்தி வருகிறார். இந்த நிலையில், ஆதவ் அர்ஜூனாவின் தங்கை சீதாலட்சுமி தனது அண்ணனுக்காக வில்லிவாக்கம் தொகுதியில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

தவெக நிர்வாகிகளுடன் இணைந்து அனல் பறக்கும் வெயிலில் வீடு, வீடாகச் சென்று வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். பெண்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவியரின் வாக்குகளைக் குறிவைத்து அவர் வாக்குசேகரித்து வருகிறார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *