பரபரப்பு… கடலூரில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு

கடலூரில் விஜய் பிரச்சாரம் செய்வதால், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கு குறைவான நாட்கள் உள்ளதால் அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், கடலூரில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை (ஏப்ரல் 11) திட்டக்குடி, நெய்வேலி, வடலூர் ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். இதற்காக அனுமதி கேட்கப்பட்டிருந்தது. ஆனால், உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்திற்கு நாளை பிற்பகல் 2 மணி முதல் இரவு 10 மணி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது..இதனால்
உதயநிதி பிரச்சாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தேர்தல் விதிமுறைகளின்படி, முதலில் யார் யார் விண்ணப்பிக்கிறார்கள்களோ அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவது வழக்கம். அதன் அடிப்படையில் விஜய் முதலில் அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்ததால் அவருக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.  இதனால் கடலூரில் நாளை நடைபெற இருந்த உதயநிதி ஸ்டாலினின் பிரச்சாரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *