உளறிக் கொட்டிய செல்லூர் ராஜூ… மாணிக்கம் தாகூர் எம்.பி கிண்டல்

தேவரை அவமதிக்கும் செல்லூர் ராஜூவின் வார்த்தைக்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள் என்று மாணிக்கர் தாகூர் எம்.பி கூறியுள்ளார்.

மதுரை மேற்குத் தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ போட்டியிடுகிறார். அவர் சோலையழகுபுரம், எம்.கே.புரம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் வாக்குசேகரித்தார். அவருக்கு ஆதரவாக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய செல்லூர் ராஜூ. ” கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தபோது சிங்கமாக, எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தார். முத்துராமலிங்கத்தேவரின் மறு உருவமாக அண்ணாமலை இருக்கிறார்” என்று கூறினார்..

உளறிக் கொட்டிய செல்லூர் ராஜூ... மாணிக்கம் தாகூர் எம்.பி கிண்டல்

இதுதொடர்பாக விருதுநகர் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் அவரது எக்ஸ் தளப்பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ” செல்லூர் ராஜூவின் நகைச்சுவை உணர்வுக்கு அளவே இல்லாமல் போனது. தேவரை அவமதிக்கும் செல்லூர் ராஜூவின் வார்த்தைக்கு மதுரை மேற்கு தொகுதி மக்கள் பதிலடி கொடுப்பார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *