சென்னையில் அனுமதியின்றி ரோடு ஷோ: விஜய் மீது வழக்கு

சென்னையில் அனுமதியின் ரோடு ஷோ சென்றதாக தவெக தலைவர் விஜய் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். தவெக தலைவர் நடிகர் விஜய் சென்னையில் தி.நகர் வேட்பாளர் என்.ஆனந்த், ஆயிரம் விளக்கு வேட்பாளர் ஜே.சி.டி.பிரபாகர், எழும்பூர் வேட்பாளர் ராஜ்மோகன் ஆகியோருக்கு நேற்று (ஏப்ரல் 15) வாக்கு சேகரித்தார்.தியாகராய நகரில் தொடங்கி பிரச்சாரம் முடியும் வரை தனது பிரச்சார வாகனத்தின் மேல் இருந்தவாறு பொதுமக்களிடம் விஜய் சேகரித்தார்.

இந்த நிலையில், தியாகராய நகரில் அனுமதிக்கப்பட்ட நிகழ்ச்சிக்குப் பதிலாக நிபந்தனையை மீறி ரோடு ஷோவில் ஈடுபட்டதாக தேர்தல் பறக்கும் படை அதிகாரி, மாம்பலம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில், தவெக தலைவர் விஜய், தி.நகர் வேட்பாளர் என். ஆனந்த் மற்றும் தென் சென்னை மாவட்ட செயலர் அப்புனு ஆகியோருக்கு எதிராக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதே போல விஜய் மீது நுங்கம்பாக்கம் மற்றும் வேப்பேரி காவல் நிலையங்களில் தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *