கோவையில் பரபரப்பு… வீடு, வீடாக அதிமுகவினர் ரூ.10,000 டோக்கன் விநியோகம்

கவுண்டம்பாளையம் தொகுதியில் 10,000 ரூபாய் டோக்கன் விநியோகம் செய்த அதிமுகவினரை திமுகவினர் விரட்டிப் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறுகிறது. இதனால் அனைத்து கட்சி தலைவர்களும் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடைபெறாமல் இருக்க இந்திய தேர்தல் ஆணையம், வாகனத்தணிக்கையில் ஈடுபட்டுள்ளது.

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் அதிமுக சார்பாக பி.ஆர்.ஜி. அருண்குமார் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியை கே.பி. சூரியபிரகாஷ் போட்டியிடுகிறார்.. இந்நிலையில், கோவை சிங்காநல்லூர், துடியலூர் பகுதிகளில் அதிமுகவினர் டோக்கன் விநியோகத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் கவுண்டம்பாளையம் தொகுதிக்கு உட்பட்ட துடியலூர் ரங்கம்மாள் காலனியில் எடப்பாடி பழனிசாமி மற்றும் வேட்பாளரின் புகைப்படத்துடன் கூடிய ரூ.10,000, ரூ..2,000 செக் மாதிரிகளை வாக்காளர்களுக்கு அதிமுகவினர் வழங்கினர்.

இந்த தகவல் அறிந்த திமுகவினர், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யும் இடத்திற்கு விரைந்து வந்தர் டோக்கன் விநியோகம் செய்தவர்களைப் பிடித்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளிடம் கொடுத்தனர். இதே போல புதுச்சேரியில் உள்ள ராஜ்பவன் தொகுதிக்குட்பட்ட பெருமாள் கோல் வீதியில் தாமரை சின்னம் பொறித்த டோக்கன்களை விநியோகம் செய்வதாக பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த இடத்திற்கு அதிகாரிகள் விரைந்து வந்தடை கண்டவுடன் கையில் வைத்திருந்த டோக்கன்களை வீசி விட்டு பாஜகவினர் தப்பியோடி விட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும்பரபரப்ப ஏற்பட்டது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *