ஒரே நாளில் திருப்பதி உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 72 லட்சம்!

ஒரே நாளில் திருப்பதி உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 72 லட்சம்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று ஒரே நாளில் 3.72 கோடி ரூபாய் உண்டியல் காணிக்கை கிடைத்துள்ளது.

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் புகழ் பெற்ற வைணவத் தலமான திருப்பதி ஏழுமலையான் கோயில் உள்ளது. இந்த தலம் திருவரங்கத்திற்கு அடுத்தபடியாக 108 திவ்விய தேசங்களில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. இந்த கோயிலுக்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் வழிபட வருகின்றனர்.

பண்டிகை காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். நேற்று முன்தினம் (பிப்ரவரி 3) ஏழுமலையானை 69,389 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.மேலும் 20,247 பேர் மொட்டை அடித்து முடிகாணிக்கை செலுத்தியுள்ளனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கை தினமும் லட்சக்கணக்கிலும், விழா நாட்களில் கோடிக்கணக்கிலும் வசூலாகிறது. நேற்று (பிப்ரவரி 4) ஒரே நாளில் உண்டியல் காணிக்கையாக ரூ 3.72 கோடி கிடைத்துள்ளது. ஓராண்டு உண்டியல் வருமானம் ரூ.1,400 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *