
சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர்கள் ரஜினிகாந்த், தனுஷ் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை போயஸ் கார்டனில் நடிகர்கள் ரஜினிகாந்த், தனுஷ் ஆகியோரின் வீடுகள் உள்ளன. இவர்களின் இரண்டு பேரின் வீடுகளில் வெடிகுண்டுகள் இருப்பதாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு இ மெயில் மூலம் தகவல் வந்தது.
இதையடுத்து தேனம்பேட்டை போலீஸார் மோப்பநாய் உதவியுடன் நடிகர்கள் ரஜினிகாந்த், தனுஷ் ஆகியோரின் வீட்டில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார் என்பது குறித்தும் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த மின்னஞ்சலின் அடிப்படையில்
விசாரணை நடத்தி வருகின்றனர்.



