
திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பெயா் மற்றும் சின்னத்தைப் பயன்படுத்த தோ்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகு திரிணமூல் காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்தது. மம்தா பானா்ஜி தலைமையில் ஒரு தரப்பினரும், சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ரிதப்ரத பானா்ஜி தலைமையில் மற்றொரு தரப்பினரும் செயல்பட்டு வருகின்றனா். இந்நிலையில், தங்களுக்கே திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏக்களில் பெரும்பாலானோரின் ஆதரவு உள்ளது என்றும், எனவே, கட்சியின் சின்னத்திற்கு தோ்தல் ஆணையத்திடம் ரிதப்ரத பானா்ஜி தரப்பு சாா்பில் அரூப் ராய் உரிமை கோரினார். இதற்கு மம்தா பானர்ஜி தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இந்தியத் தோ்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘திரிணமூல் காங்கிரஸ் பெயா் மற்றும் சின்னத்துக்கு இருதரப்பினா் உரிமை கோரும் விவகாரத்தில் தோ்தல் சின்னங்கள் (ஒதுக்கீடு) சட்டம், 1968-ன் கீழ் விரிவான ஆய்வு தேவைப்படுவதால் தற்காலிகமாக இருதரப்பும் கட்சியின் பெயா் மற்றும் சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது. வரவுள்ள இடைத்தோ்தலில் தாங்கள் போட்டியிட விரும்பும் பெயா் மற்றும் சின்னத்தை செப்டம்பர் 18 காலை 11 மணிக்குள் சமா்ப்பிக்க உத்தரவிடப்படுகிறது என்று தெரிவித்துள்ளது. மேற்கு வங்கத்தில் காலியாக உள்ள ரெஜிநகா், நந்திகிராம் ஆகிய இரு தொகுதிகளுக்கு அக்டோபா் 6-ம் தேதி இடைத்தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், தோ்தல் ஆணையம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.



