வந்தே மாதரம் பாடினால் பதவி ஏற்க மாட்டீர்களா?: வன்னி அரசுக்கு சவால் விட்ட பாஜக

வந்தே மாதரம் பாடலை பாடும் போது விசிகவின் வன்னி அரசு அமைச்சராக பதவி ஏற்கமாட்டேன் என்று அறிவிப்பாரா என பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழக வெற்றிக் கழக கூட்டணி ஆட்சியில் விசிகவில் வன்னி அரசு, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் ஷாஜஹான் ஆகியோர் இன்று (மே 22) அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர். அவர்களுக்கு பொறுப்பு ஆளுநர் அர்லேகர் பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.

இந்த நிலையில், தமிழ்நாடு பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ” ஒன்பது அமைச்சர்கள் பதவியேற்பு, முதலில் வந்தே மாதரம் முடிவில் தமிழ் தாய் வாழ்த்து- ஆதவ் அர்ஜுனா கொதிப்பு, அடுத்த முறை நடக்காது என்று பதிவு, இரண்டாம் முறை 23 அமைச்சர் பதவி ஏற்பு- எப்போதும் போல் முதலில் வந்தே மாதரம்- அமைச்சர் ராஜ்மோகன் கொதிப்பு, நாளைக்கு (மே 22 ) மூன்றாம் முறை பதவி ஏற்பு,

வன்னி அரசு பதவி ஏற்க இருக்கிறார். வந்தே மாதரம் பாடினால் பதவி ஏற்க மாட்டேன் என்று வன்னி அரசு மறுக்க முடியுமா? தவெக அமைச்சர்கள், சிபிஎம் புறக்கணிக்க முடியுமா? சவால் பதில் சொல்லுங்கள் வன்னி அரசு” என்று பதிவிட்டுள்ளார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *