
சாதி ஒழிப்பு போராளி அயோத்திதாச பண்டிதரின் பிறந்தநாளையொட்டி, அவரது சிலைக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் மரியாதை செலுத்தினார்.
சமூக நீதி, சாதி ஒழிப்பு, பகுத்தறிவு மற்றும் பவுத்த மறுமலர்ச்சிக்காகப் போராடிய முன்னோடித் தலைவர் பண்டிதர் அயோத்திதாசர். அவரின் 181-வது பிறந்தநாள் (மே 20) இன்று கொண்டாடப்படுகிறது.
இதனை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், என்.ஆன்ந்த், வெங்கட்ரமணன், நிர்மல்குமார், ராஜ்மோகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.



