
வணிக பயன்பாட்டு கியாஸ் சிலிண்டர் விலை 993 ரூபாய் உயர்ந்து ரூ.3,237-க்கு விற்பனை செய்யப்படுகிறது
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்யப்பட்டு வருகின்றன. இதில் சமையல் கியாஸ் சிலிண்டர்களின் விலையை மாதத்தின் முதல் தேதியில் மாற்றி அமைத்து வருகிறது.
அதன்படி கடந்த மார்ச் 1-ம் தேதி சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப வணிக சிலிண்டரின் விலை ரூ.29.50 காசுகள் உயர்த்தப்பட்டு, ரூ.1929-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேவேளையில், வீட்டு உபயோக சிலிண்டர் விலை எந்த மாற்றமும் இன்றி ரூ.868.50க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் ஈரான் – இஸ்ரேல் போர் காரணமாக நாடு முழுவதும் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதே மாதத்தில் இரண்டாவது முறையாக உயர்த்தப்பட்டது.
அதன்படி, 14.2 கிலோ எடையுள்ள எல்பிஜி சிலிண்டரின் விலை நாடு முழுவதும் ரூ.60 உயர்ந்தது. சென்னையில் இது .868.50 ரூபாயிலிருந்து ரூ.928.50-ஆக உயர்ந்தது. அதேநாளில் 19 கிலோ வணிக சிலிண்டரின் விலையும் ரூ.115 உயர்ந்தது. இதனால் சென்னையில் 1,929 ரூபாயிலிருந்து ரூ.2,043.50-ஆக கியாஸ் விலை உயர்ந்தது. மார்ச் மாதத்தில் மட்டும் வணிக சிலிண்டர் விலை ரூ.144.50 காசுகள் உயர்ந்தது.
இந்நிலையில் ஏப்ரல் 1-ம் தேதி சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப வணிக சிலிண்டரின் விலை மீண்டும் உயர்ந்தது சென்னையில் 19 கிலோ வணிக சிலிண்டரின் விலை ரூ.203 உயர்ந்தது. இதனால் சென்னையில் வணிக சிலிண்டரின் விலை 2043.50 ரூபாயிலிருந்து ரூ.2246.50 காசுகளாக உயர்ந்தது.
இந்த நிலையில் சென்னையில் 19 கிலோ வணிக சிலிண்டரின் விலை ரூ.993 உயர்ந்தது. இதனால் சென்னையில் வணிக சிலிண்டரின் விலை 2043.50 ரூபாயிலிருந்து ரூ.2246.50 காசுகளாக உயர்ந்தது.
இந்த நிலையில், டெல்லியில் 19 கிலோ வணிக பயன்பாடு சிலிண்டர் ரூ.993 உயர்ந்துள்ளது. இதனால் சென்னையில் வணிக சிலிண்டர் விலை 3,237 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. எனினும், வீட்டு உபயோக சமையல் எரிவாயு (14.2 கிலோ) சிலிண்டர் விலையில் மாற்றமில்லை. மேற்காசிய போர் பதற்றத்தால் சர்வதேச சந்தையில் எரிசக்தி விலை உயர்ந்துள்ளதே இந்த மாற்றத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது..



