டெல்லியில் பெண் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்: விஸ்வரூபம் எடுக்கும் பிரச்னை!

டெல்லியில் பெண் பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எஸ்ஐஆர் முறைகேடு, வாக்குத்திருட்டு விவகாரம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 13 கோடி பேரின் வாக்குரிமையை பறித்த இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமுர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி டெல்லியில், எதிர்க்கட்சியினரும், மாணவ அமைப்புகளும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். குறிப்பாக ஜந்தர் மந்தரில் .நடைபெறும் போராட்டத்தின் போது செய்தி சேகரிக்க செல்லும் பத்திரிகையாளர்களை தாக்கவோ, கைது செய்யவோ கூடாது என உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த நிலையில் அந்த உத்தரவை மீறி பெண் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது,

மேலும் பத்திரிகையாளர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். எனவே, இது தொடர்பாக காவல்துறையின் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை இன்றே (அக்.13) விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், தலைமை நீதிபதி சூரியகாந்த் அமர்வு முன்பு முறையிட்டார்

அப்போது தலைமை நீதிபதி , போராட்டம் தொடர்பான பல்வேறு வழக்குகள் இன்று விசாரணைக்கு எடுக்கப்பட உள்ள நிலையில், அவமதிப்பு நடவடிக்கைக் கோரிய இந்த வழக்கை நாளைய தினம் விசாரணை எடுத்துக் கொள்வதாக தெரிவித்தார். அதற்கு மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கர் நாராயணன் முன்னுரிமை கொடுத்து இந்த வழக்கை விசாரணை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதனை ஏற்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த், நிச்சயம் முன்னுரிமை கொடுத்து வழக்கு விசாரணை செய்யப்படும் என்று உறுதியளித்து, அவமதிப்பு நடவடிக்கை கோரிய வழக்கை நாளை (அக்.14) விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகவும் தெரிவித்தார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *