தமிழகத்தில் 126 எம்எல்ஏக்கள் மீது கிரிமினல் வழக்குகள்… தவெகவுக்கு முதலிடம்

தமிழ்நாட்டில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களில் 126 பேர் மீது கிரிமினல் வழக்குகள் பதிவாகி உள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-ல் வெற்றி பெற்ற 234 வேட்பாளர்களில் 233 பேரின் சுயவிவரப் பிரமாணப் பத்திரங்களை ஆய்வு செய்து அறிக்கையை
ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆர்) மற்றும் தமிழ்நாடு தேர்தல் கண்காணிப்பகம் அமைப்பு ஆகியவை வெளியிட்டுள்ளன. இதில் திருவள்ளூர் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற டாக்டர் டி.அருண்குமாரின் பிரமாணப் பத்திரம், இந்திய தேர்தல் ஆணைய தளத்தில் தெளிவாக இல்லாத காரணத்தால் ஆய்வு செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் 233 பேரில் 126 ( 54 சதவீதம்) சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் மீது குற்றவியல் வழக்குகள் இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதில் கொலை, கடத்தல் போன்ற கடுமையான குற்றவழக்குகள் இருப்பதாக 56 (24 சதவீதம்) சட்டமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் ஒரு சட்டமன்ற உறுப்பினர் தன் மீது கொலைவழக்கு இருப்பதாகவும், 6 சட்டமன்ற உறுப்பினர்கள் மீது கொலை முயற்சி வழக்கு இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த பட்டியலில் அதிகபட்சமாக தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் 107 பேரில் 41 ()38 சதவீதம்) பேர் மீது கிரிமினல் வழக்குள் பதிவாகியுள்ளன. அதற்கு அடுத்த இடங்களில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 59 பேரில் 37 பேர்(63 சதவீதம்), அதிமுக 47 சட்டமன்ற உறுப்பினர்களில் 33பேர் (70 சதவீதம்). பாமக 4 சட்டமன்ற உறுப்பினர்களில் 4 (100 சதவீதம்) பேர், காங்கிரஸ் 5 சட்டமன்ற உறுப்பினர்களில் 3(60 சதவீதம்) பேர் மீதும் குற்ற வழக்குகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *