எடப்பாடியை ஓரங்கட்ட முடிவு… வேலுமணி அதிமுக சட்டமன்றக்குழு தலைவர்?

எஸ்.பி.வேலுமணியை அதிமுக சட்டமன்றக்குழு தலைவராக கொண்டு வருவதற்காக முயற்சிகள் நடந்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் பொறுப்பேற்றுள்ள நிலையில், சட்டமன்ற உறுப்பினர்களின் பதவியேற்பு விழா இன்று (மே 11) நடைபெற்றது. கடந்த 3 நாட்களாக சி.வி.சண்முகம் தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் தனியாக கூட்டம் நடத்தி வந்தனர். இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் வேலுமணி உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிலையில், எம்எல்ஏ பதவியேற்பு விழாவிற்கு எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு குழுவினரும், எஸ்.பி.வேலுமணி தலைமையில் ஒரு குழுவினரும் சபைக்கு வந்தனர்.

இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக 17 எம்எல்ஏக்கள் பேரவைச்செயலாளரிடம் மனு அளித்துள்ளனர். தளவாய் சுந்தரம், ஓ.எஸ்.மணியன், அக்ரிகிருஷ்ணமூர்த்தி, மரகதம் குமாரவேல் உள்பட 17 எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அளித்துள்ளனர். ஆனால், எஸ்.பி.வேலுமணியை சட்டமன்ற குழுத்தலைவராக தேர்ந்தெடுக்க மொத்தமுள்ள 47 எம்எல்ஏக்களில் 36 பேர் ஆதரவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சட்டமன்ற அதிமுக குழுத் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், எஸ்.பி.வேலுமணியை அதிமுக சட்டமன்றக் குழுத்தலைவராக தேர்வு செய்ய சிலர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மே 13-ம் தேதி தவெக தலைவர் விஜ தலைமையிலான புதிய அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நிலையில், .திமுக யாருக்கு ஆதரவு அளிக்கப் போகிறது என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த நிலை அதிமுகவுக்குள் ஏற்பட்டுள்ள கோஷ்டி பூசல் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *