வலிமையான எதிர்க்கட்சியாக திமுக செயல்படும்:கலாநிதி வீராசாமி எம்.பி!

காங்கிரஸின் துரோகத்தை மீறி திமுக வலிமையான எதிர்க்கட்சியாக செயல்படும் என்று கலாநிதி வீராசாமி எம்.பி கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக மாறியுள்ளது. இந்த நிலையில்,
தவெகவிற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்துள்ளது. இதையடுத்து விஜய் மற்றும் தவெக நிர்வாகிகள் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்து உரிமை கோரினர்.

அதற்கு பெரும்பான்மைக்குத் தேவையான 118 சட்டமன்ற உறுபபினர்களின் ஆதரவு குறித்த தகவலை சமர்பிக்க்குமாறு ஆளுநர் கோரியதாக கூறப்படுகிறது. இதனால் இரண்டு முறையாக ஆளுநரை சந்தித்து தவெக நிர்வாகிகள் மற்றும் சட்ட வல்லுநகர்கள் விளக்கம் அளித்தனர். ஆனால், பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் அழைக்கவில்லை. இதனால் இன்று(மே 7) நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட விஜய்யின் பதவியேற்பு விழா தள்ளிப்போய் உள்ளது.

இந்த நிலையில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், ” காங்கிரஸின் துரோகத்தையும் மீறி, திமுக ஒரு வலிமையான எதிர்க்கட்சியாக செயல்பட முடிவெடுத்துள்ளது. தவெக ஆட்சி அமைப்பதைத் தடுக்குமாறு பாஜகவை அதிமுக வலியுறுத்தி வருகிறது. இது மக்களின் தீர்ப்பை அவமதிப்பதாகும்.. ஜனநாயகம் வெல்லும் என்று நம்புவோம்” என்று அதில் பதிவிட்டுள்ளார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *