மு.க.ஸ்டாலின் தோல்விக்கு இபிஎஸ் வருந்தினார்: அதிமுக செயலாளர் பரபரப்பு பேட்டி

மு.க.ஸ்டாலின் தோல்வியடைந்ததற்கு இபிஎஸ் வருந்தினார் என்று புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் கூறினார்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களில் நடிகர் விஜய்யின் ( தவெக தமிழக வெற்றிக் கழகம்) 108 இடங்களில் அமோக வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. பெரும்பான்மையை நிரூபிக்க காங்கிரஸ் கட்சியின் ஆதரவை தவெக கோரியது. இதையடுத்து பல்வேறு நிபந்தனைகளுடன் தவெகவிற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்தது. அத்துடன் அதற்காக கடிதத்தையும் வழங்கியது.

இந்த நிலையில், விசிக, இடதுசாரி கட்சிகள் ஆதரவை தவெக கோரியுள்ளது. ஆனால், அந்த கட்சிகளில் இருந்து இதுவரை எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. இதனால் தவெக ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த தேர்தலில் தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோல்வியடைந்தார். திமுகவினர் மட்டுமின்றி பல்வேறு தரப்பினர் இதனால் அதிர்ச்சியடைந்தனர்.

இந்த நிலையில், புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ” திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தோல்விக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருந்தினார். ‘ஸ்டாலின் எல்லாம் எவ்வளவு பெரிய தலைவர்’ எனக் கூறி இபிஎஸ் வருந்தினார். ‘இந்த மக்கள் எப்படி யோசிக்கிறார்கள்’ என்று தெரியவில்லை எனக்கூறி வருந்தினார். அரசியலில் வெவ்வேறு துருவங்களாக இருந்தாலும் அரசியல் மாண்புள்ளவர் எடப்பாடி பழனிசாமி” என்று தெரிவித்தார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *