என் மகள்களை என்னுடன் அழைத்துச் செல்கிறேன்: கடிதம் எழுதி வைத்து விட்டு தந்தை செய்த சம்பவம்!

பெங்களூரு ஓட்டலில் தனது 2 மகள்களை கொலை செய்த தந்தை தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள நாகவரா மெயின் ரோடு அருகே உள்ள பிலால் நகரைச் சேர்ந்தவர் இம்ரான். தனியார் வாகன நிறுவனத்தின் மேலாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி, ஷேக் ஜெஹாரா(5), ஷேக் ஜோயா(10) ஆகிய இரண்டு மகள்கள் இருந்தனர். இந்த நிலையில், பெங்களூருவில் உள்ள ஒரு ஓட்டலில் இம்ரான் தனது இரண்டு மகள்களுடன் தங்கியிருந்தார். தனது நண்பர் துபாயில் வருவார் என்று ஓட்டல் ஊழியர்களிடம் கூறியுள்ளார்.

இந்த நிலையில், மறுநாள் மதியம் வரை இம்ரான் தங்கியிருந்த அறை திறக்கப்படவில்லை. அந்த அறையைச் சுத்தம் செய்ய வந்த ஊழியர், கதவைத் தட்டியும் திறக்கப்படவில்லை. இதனால் ஓட்டல் மேலாளரிடம் அவர் தகவல் தெரிவித்தார். இது தொடர்பாக போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வரவும், மாற்று சாவி மூலம் இம்ரான் தங்கியிருந்த அறையை ஓட்டல் ஊழியர்கள் திறந்தனர். அங்கு கழுத்து அறுபட்ட நிலையில் இம்ரான் மயங்கி கிடந்தார். அவர் அருகில் அவரது இரண்டு மகள்களும் மூர்ச்சையாகி கிடந்தனர்.

இதையடுத்து அவர்கள் மூவரும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், இம்ரானின் இரண்டு மகள்களும் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இம்ரான் தங்கியிருந்த அறையை போலீஸார் சோதனை செய்த போது அவர் எழுதிய கடிதம் சிக்கியது. அதில், தனது மனைவிக்கு திருமணத்திற்கு புறம்பான உறவு இருந்ததாகவும், தட்டிக் கேட்டதால் தன்னை அவர் காயப்படுத்தினால், என்னுடன் என் மகள்களை அழைத்துச் செல்கிறேன் என்று எழுதப்பட்டிருந்தது.

தனது இரண்டு மகள்களையும் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு தன் கழுத்தை அறுத்து இம்ரான் தற்கொலைக்கு முயன்றது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வடக்கு கிழக்குப் பிரிவு காவல்துறை துணை ஆணையர் மிதுன் குமார் விசாரணை நடத்தி வருகிறார். தனது 2 மகள்களைக் கொன்று விட்டு தந்தை தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெங்களூருவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *