குஷ்பு சென்ற ஹெலிகாப்டர் பறக்கும் படையால் சுற்றி வளைப்பு… உதகையில் பரபரப்பு

உதகையில் தேர்தல் பிரசாரத்திற்கு நடிகை குஷ்பு சென்ற ஹெலிகாப்டரை தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் ஏப்ரல் 23-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில், கட்சித் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையத்தின் பறக்கும படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் வாகனங்களில் அவர்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், பாஜக வேட்பாளர் போஜ ராஜனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க பாஜக மாநில துணைத்தலைவர் நடிகை குஷ்பு, இன்று (ஏப்ரல் 17) ஹெலிகாப்டர் மூலம் உதகைக்குச் சென்றார். அங்கு அவர் ஹெலிகாப்டரில் இருந்து தரையிறங்கியவுடன் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்ததால் பரபப்பு ஏற்பட்டது.

இந்த சோதனைக்குப் பின் கார் மூலம் அங்கிருந்து குஷ்பு பிரசாரம் நடைபெறும் இடத்திற்குச் சென்றார். கடந்த வாரம் உதகையில் பிரசாரம் மேற்கொள்வதற்காக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை சென்ற ஹெலிகாப்டரையும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தனர் குறிப்பிடத்தக்கது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *