தமிழ்நாடு, புதுச்சேரியில் எரிபொருள் தட்டுப்பாடா?: வெளியான பரபரப்பு தகவல்

தமிழ்நாடு, புதுச்சேரியில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை என்று மாநில எண்ணெய் தொழில் ஒருங்கிணைப்பாளர் வி.சி.அசோகன் தெரிவித்துள்ளார்.

இந்தியன் ஆயில், பிபிசிஎல் மற்றும் ஹெச்பிசிஎல் உள்ளிட்ட பொதுத்துறை எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முழுவதும் பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி விநியோகத்தை எந்தவிதக் கட்டுப்பாடும் இன்றி தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன.

இது தொடர்பாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநில எண்ணெய் தொழில் ஒருங்கிணைப்பாளர் வி.சி. அசோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் நிலவி வரும் நிச்சயமற்ற சூழ்நிலைகளையும் மீறி, பொதுமக்களுக்கு தடையற்ற எரிபொருள் விநியோகம் உறுதி செய்யப்பட்டுள்ளது. டெர்மினல்கள், டிப்போக்கள், எல்பிஜி நிரப்பு நிலையங்கள் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள் மூலம் எரிபொருள் விநியோகம் வழக்கம்போல் நடைபெற்று வருவதுடன், போதுமான அளவில் பெட்ரோலிய பொருட்கள் கையிருப்பில் உள்ளது.

மேலும், வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் விநியோகமும் மாநிலம் முழுவதும் சீராக நடைபெற்று வருகிறது. எரிபொருள் விநியோக நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதுடன், பொதுமக்கள் தேவையற்ற பதற்றத்தால் அதிகளவில் எரிபொருள் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். எரிபொருள் கிடைப்புத் தொடர்பான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே பொதுமக்கள் நம்புமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *