
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு டாஸ்மாக் கடைகளில் ஒரே நாளில் ரூ.400 கோடிக்கும் மேல் மது விற்பனையாகியுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறுகிறது. 234 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நடைபெறும் தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 21-ம் தேதி முதல் ஏப்ரல்- 23-ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மற்றும் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. விடுமுறை நாட்கள் மதுபானங்கள் விற்க தடை விதிக்கப்பட்டது. அப்படி மீறி விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு எச்சரித்துள்ளது.
இந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 21) ஒரே நாளில், தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் ரூ. 400 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை நடைபெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், வழக்கமான விற்பனையை விட, டாஸ்மாக் கடைகளில் சுமார் இரண்டரை மடங்கு அதிகமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் கடந்த சட்டமன்றத் தேர்தலின்(2021) போனது ஒரே நாளில் ரூ.350 கோடிக்கும், 2024 மக்களவைத் தேர்தலின் போது ரூ.289 கோடிக்கும் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனையானது குறிப்பிடத்தக்கது.



