
அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன்
அமமுக 11 வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் 11 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று (மார்ச் 28) வெளியிட்டார். இதில் முன்னாள் அமைச்சர்கள் சி.சண்முகவேல், செந்தமிழன் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.
அதன்படி சைதாப்பேட்டையில் செந்தமிழன், மடத்துகுளத்தில் சண்முகவேல், மன்னார்குடியில் காமராஜ், திருப்பத்தூரில் ஞானசேகர், காரைக்குடியில் தேர்போகி பாண்டி, திருவையாறில் கார்த்திகேயன், பெரியகுளத்தில் கதிர்காமு, நாங்குநேரியில் இசக்கிமுத்து, பூவிருந்தவல்லியில் ஏழுமலை, ஒட்டப்பிடாரத்தில் சுந்தர்ராஜன், திருச்சி மேற்கு தொகுதியில் செந்தில்நாதன் ஆகியோர் போட்டியிடுவதாக டி.டி.வி.தினகரன் அறிவித்தார். அத்துடன் அமமுக தேர்தல் அறிக்கையையும் அவர் வெளியிட்டார்.



