
தமிழக முதலமைச்சர் விஜய் அரசியல் நாகரிகத்துடன் என்னைச் சந்தித்து வாழ்த்து பெற்றார் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனால், ஆட்சியமைக்க பெரும்பான்மை இல்லாதததால் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. தமிழ்நாடு முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் மற்றும் 9 அமைச்சகர்கள் நேற்று (மே 10) பதவியேற்றுக் கொண்டனர். இந்த நிலையில், தற்காலிக சபாநாயகர் கருப்பையா முன்னிலையில், சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று (மே 11) பதவியேற்றுக் கொண்டனர். வரும், மே 13-ம் தேதி பெரும்பான்மையை தவெக நிரூபிக்க வேண்டிய நிலையில் உள்ளது.
இந்த நிலையில், திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இல்லத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்து பெற்றார். அவரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் வரவேற்றனர். இதன் தொடர்ச்சியாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோவையும், அவரது இல்லத்தில் சென்று முதலமைச்சர் விஜய் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இது தொடர்பாக முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில்,” மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள திரு. விஜய் அவர்கள் அரசியல் நாகரிகத்துடன் என்னைச் சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருக்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்” என்று தெரிவித்துள்ளார். அத்துடன் விஜய் சந்தித்து வாழ்த்து பெற்ற படங்களையும் தனது எக்ஸ் பக்கத்தில் மு.க.ஸ்டாலின் பகிர்ந்துள்ளார்..



