புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி… டெல்டாவில் 4 நாட்களுக்கு மழை

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக 4 நாட்களுக்கு மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறுகையில், இலங்கை கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும். இதனால் தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் நான்கு நாட்களுக்கு மிதமான மழையே பெய்யக் கூடும்

அதேநேரம், மே 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 10 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும் சென்னையைப் பொறுத்தவரை, இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், அதிகபட்ச வெப்ப நிலை 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு கீழ் இருக்கும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *