தமிழ்நாட்டின் புதிய சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்!

தமிழ்நாட்டின் புதிய சபாநாயகராக ஜே.சி.டி.பிரபாகர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சராக சி.ஜோசப் விஜய், 9 அமைச்சர்கள் நேற்று ( மே10) பதவியேற்றுக் கொண்டனர். இந்த நிலையில், பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினரான விஜய் இன்று (மே 11) பொறுப்பேற்றுக் கொண்டார். மேலும் சட்டமன்ற உறுப்பினர்கள், தற்காலிக சபாநாயகர் சோழவந்தான் கருப்பையா முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் முன்னிலையில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் பதவிக்கு ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜே.சி.டி. பிரபாகர் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவர் சட்டப்பேரவை முதன்மைச் செயலாளர் சீனிவாசனிடம் மனுவைத் தாக்கல் செய்தார்.

இன்று மாலையுடன் சபாநாயகர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்தது. ஆனால் ஜே.சி.டி. பிரபாகரை தவிர வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. இதனால் ஜே.சி.டி. பிரபாகர் போட்டியின்றி தேர்வாகிறார். துணை சபாநாயகராக துறையூர் தொகுதி எம்.எல்.ஏ. ரவிசங்கர் தேர்வு செய்யப்பட உள்ளார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *