4வது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மத்திய அரசு கொடுத்த ஷாக்!

ஒரே மாதத்தில் நான்காவது முறையாக பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.

ஈரான் மீது அமெரிக்க படைகள், இஸ்ரேல் நடத்திய போர் காரணமாக மேற்கு ஆசிய நாடுகளில் பதற்றம் நீடித்து வருகிறது. மேலும் சர்வதேச கச்சா எண்ணெய் வர்த்தகத்தின் மையமான ஹோர்முஸ் ஜலச்சந்தியில் நீடிக்கும் பதற்றம் காரணமாக பெட்ரோல், டீசல் விலை இந்தியாவில் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது.

கடந்த ஒரே மாதத்தில் மூன்று முறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய மத்திய அரசு இன்று (மே 25) நான்காவது முறையாக பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியுள்ளது வாகன ஓட்டிகளையும், பொதுமக்களையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

இன்று 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ2.61 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளன. அதன் படி சென்னையில் பெட்ரோல் விலை இன்று லிட்டருக்கு ரூ.2.46 உயர்ந்து ஒரு லிட்டர் ரூ.107.77க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.57 உயர்ந்து ஒரு லிட்டர் ரூ..99.55க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலை மீண்டும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஒரே மாதத்தில் நான்காவது முறையாக மோடி தலைமையிலான பாஜக அரசு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியுள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், கடும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஒரே மாதத்தில் பெட்ரோல் டீசல் விலை நான்காவது முறையாக உயர்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *