
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள், பக்ரீத் பண்டிகையை இன்று (மே 28) இன்று கொண்டாடுகின்றனர். இந்நாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். சமூகத்தில் சகோதரத்துவ உணர்வு மேலும் வலுப்பெற இந்த பண்டிகை உதவ வேண்டும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது எக்ஸ் தளத்தில் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். அதில்,” பக்ரீத் நல்வாழ்த்துகள். இந்த பண்டிகை நமது சமூகத்தில் சகோதரத்துவத்தையும் மகிழ்ச்சியையும் மேலும் அதிகரிக்கட்டும். அனைவருக்கும் வெற்றியும் நல்ல உடல்நலமும் .கிடைக்க பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்..



