திரையுலகின் ஒரு மிகச்சிறந்த ஆளுமை பாரதிராஜா: பிரதமர் மோடி இரங்கல்

திரையுலகின் ஒரு மிகச்சிறந்த ஆளுமையாகத் திகழ்ந்தவர் என்று இயக்குநர் பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

தமிழ் திரைப்படைத்துறையின் முன்னணி இயக்குநரான பாரதிராஜா நேற்று (ஜூன் 10) காலமானார். சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்ட பாரதிராஜா உடலுக்கு ஏராளமான திரைத்துறை, அரசியல் கட்சியினர் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து பாரதிராஜாவின் இறுதிச்சடங்கு இன்று முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

இந்த நிலையில் இயக்குநர் பாரதிராஜாவின் மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ ரதிராஜா அவர்களின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரையுலகின் ஒரு மிகச்சிறந்த ஆளுமையாகத் திகழ்ந்தவர். குறிப்பாக, கிராமப்புற வாழ்க்கையை அவர் சித்தரித்த விதம் மிகவும் குறிப்பிடத்தக்கது. துயரத்தின் இந்த வேளையில், அவரது குடும்பத்தினருடனும் ரசிகர்களுடனும் என் எண்ணங்கள் இணைந்துள்ளன. ஓம் சாந்தி” என்று தெரிவித்துள்ளார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *