ஆசிய விளையாட்டில் பிரணவி அசத்தல்: மகளிர் கோல்ஃப் போட்டியில் முதல் தங்கம்

மகளிருக்கான கோல்ஃப் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் பிரணவி சரத் தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

ஜப்பானில் உள்ள அய்ச்சி- நகோயா பகுதியில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் – 2026 செப்டம்பர் 19-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. மகளிருக்கான கோல்ஃப் விளையாட்டில் 23 வயதான பிரணவி சரத் தங்கம் வென்றுள்ளார். இந்தப் பிரிவில் சீன வீராங்கனை வெள்ளியும், சிங்கப்பூர் வீராங்கனை வெண்கலமும் வென்றனர்.

மகளிருக்கான கோல்ஃப் போட்டியில் இந்தியாவுக்கு ஆசிய விளையாட்டுப் போட்டியில் பிரணவி சரத் வென்ற முதல் தங்கம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக 2002-ம் ஆண்டு தனிநபர் ஆடவர் பிரிவில் ஷிவ் கபூர் தங்கம் வென்றிருந்தார். மகளிர் பிரிவில் முதல்முறையாக இந்தப் பதக்கத்தை பிரணவி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இத்துடன் 18 தங்கம், 25 வெள்ளி, 35 வெண்கலம் உடன் 78 பதக்கங்களுடன் இந்தியா பதக்கப் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் நீடிக்கிறது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *