
26 நாட்களுக்குப் பிறகு உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொள்வதாக சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் அறிவித்துள்ளார்.
நீட் தேர்வு மோசடிகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வலியுறுத்தி சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் 26 நாட்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்து வந்தார். இந்த நிலையில் இன்று (ஜூலை 24) தனது போராட்டத்தை அவர் அதிகாரபூர்வமாக முடித்துக் கொண்டார். குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில், மத்திய அமைச்சர்கள் ஜே.பி நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோரின் முன்னிலையில் அவர் தனது உண்ணாவிரதத்தை நிறைவு செய்தார்
இது தொடர்பாக சோனம் வாங்சுக் தமது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ” மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா மற்றும் டாக்டர் ஜிதேந்திர சிங் முன்னிலையிலும், லே லடாக் உயர்நிலைக் குழுவின் மூத்த தலைவர்கள் முன்னிலையிலும், 26 நாட்களுக்குப் பிறகு எனது உண்ணாவிதத்தைக் கைவிட்டேன்.
முன்னதாக, பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 65 நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்னை நேரில் சந்தித்தும் கடிதங்கள் மூலமாகவும் உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு வலியுறுத்தியிருந்தனர். பல்வேறு நிபந்தனைகள் குறித்த நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகும், வன்முறைகள் உருவாகக் கூடிய சாத்தியங்களை கருத்தில் கொண்டும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
என்னுடைய நிபந்தனைகள் குறித்த விரிவான விளக்கத்தை மிக விரைவில் மற்றொரு தனி வீடியோவில் வெளியிடுவேன். எந்த வகையிலுமான வன்முறைக்கு யாரும் இடமளிக்காமல் மிக கவனமாக இருக்க வேண்டும் என்று உங்களை கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.



