தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியீடு

தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.31 சதவீத மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் 2025-26-ம் கல்வியாண்டிற்கான 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 11-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ம் தேதி வரை நடைபெற்றது. இத்தேர்வை 12,467 பள்ளிகளைச் சேர்ந்த 8,82,806 மாணவர்களும், தனித்தேர்வர்கள் 25,801 பேர், சிறைவாசிகள் 395 பேர் என மொத்தம் 9,09,002 மாணவர்கள் இத்தேர்வை எழுத அனுமதிக்கப்பட்டனர் இதில் தமிழ் பொதுத்தேர்வை 10,877 மாணவர்கள் மற்றும் 1,021 தனித்தேர்வர்கள் எழுதவில்லை.

ஆங்கிலப் பொதுத் தேர்வை 10,369 மாணவர்களும், 1,042 தனித்தேர்வர்களும் எழுதவில்லை. கணிதம் பொதுத் தேர்வை 11,284 மாணவர்களும் 1,524 தனித்தேர்வர்களும் எழுதவில்லை. அறிவியல் தேர்வு எழுத 11,341 மாணவர்களும் 1,240 தனித்தேர்வர்களும் வரவில்லை. சமூக அறிவியல் தேர்வை 11,228 மாணவர்களும் 1,231 தனித்தேர்வர்களும் எழுதவில்லை. ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற்ற விருப்பமொழி பாடத்தேர்வை எழுத 118 பேர் வரவில்லை.

மாணவர்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 13-ம் தேதி முதல் 20-ம் தேதிக்குள் முடிக்கப்பட்டது. 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை மே மாதம் 20-ம் தேதி வெளியிடப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, 2025-26-ம் கல்வி ஆண்டுக்கான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை சென்னை கோட்டூர்புரம் அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் இன்று (மே 20) வெளியிட்டார். இதில் 12,467 பள்ளிகளில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 87.06 லட்சம் மாணவர்களில் 8,21,105 மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். வழக்கம் போல் மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகம். 96.47 சதவீதம் மாணவிகளும், 92.15 சதவீதம் மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *