தேர்தல் ஆணையம் அதிரடி… தமிழ்நாடு உளவுத்துறை ஐ.ஜி மாற்றம்

தமிழ்நாடு உளவுத்துறை ஐ.ஜியாக இருந்த செந்தில் வேலை தேர்தல் ஆணையம் அதிரடியாக மாற்றியுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறுகிறது. தேர்தல் தேதி நெருங்குவதால் தமிழ்நாடு முழுவதும் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் தமிழ்நாடு உளவுத்துறை ஐ.ஜியாக இருந்த செந்தில்வேலை தேர்தல் ஆணையம் மாற்றி உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு உளவுத்துறை ஐ.ஜியாக அவினாஷ் குமார் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவரது நியமனம் உடனடியாக நடைமுறைக்கு வருவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *