
தவெகவுக்கு எந்த சூழலிலும் அதிமுக ஆதரவு அளிக்காது என்று கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதன் பின் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், “பல ஊடகங்களில் தவெகவுக்கு அதிமுக ஆதரவளிக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. அது முற்றிலும் தவறான செய்தி.
எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்குப் பின்னர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக வலுவாக செயல்பட்டு வருகிறது. எந்தச் சூழ்நிலையிலும் தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது என்பதை எடப்பாடி பழனிசாமி ஒப்புதலுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.



