
விளாத்திகுளத்தில் மாணவியை பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம். விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி, கடந்த மார்ச் 10-ம் தேதி காணாமல் போனார். காட்டுப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார். இது தொடர்பாக 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. குற்றவாளியைப் போலீஸார் தேடி வந்தனர். காட்டுப்பகுதியில் உள்ள காற்றாலையின் சிசிடிவி காட்சியை காவலர்கள் ஆய்வு செய்தனர். அப்போது அந்த வழியாக ஒருவர் பைக்கில் சென்ற காட்சி பதிவாகி இருந்தது. அந்த பைக்கின் பதிவெண்ணை வைத்து விசாரணை நடத்தியதில் அந்த பைக் திருடுபோனது தெரியவந்தது. அந்த பைக்கை திருடிய நபர் குறித்து காவலர்கள் விசாரணை நடத்திய நிலையில்,தர்ம முனீஸ்வரன் என்பவர் சிக்கினார்.
இவர், ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் 2020-ம் ஆண்டு எட்டயபுரம் அருகே மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் 2022-ம் கைது செய்யப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது. அவர் பிணையில் வந்த நிலையில், விளாத்திகுளம் பிளஸ் 2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததுவிசாரணையில் அம்பலமானது. இதனைத் தொடர்ந்து தர்ம முனீஸ்வரனை விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இது தொடர்பான வழக்கு தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நீதிபதி பிரீத்தா சாட்சிகளிடம் விசாரணை செய்து வந்தார். சாட்சிகளிடம் விசாரணை நிறைவடைந்த நிலையில் இன்று ( மே 25) தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தர்ம முனீஸ்வரன் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் குற்றவாளி தர்ம முனிஸ்வரனுக்கு இரட்டை தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 மாணவி கொலை செய்யப்பட்டு 76 நாளில் தீர்ப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.



