தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்றார் விஜய்: 9 அமைச்சர்களும் பதவியேற்பு

தமிழ்நாட்டின் முதலமைச்சராக சி.ஜோசப் விஜய் இன்று பதவியேற்றார்.

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றிபெற்றது. இதனையடுத்து காங்கிரஸ் கூட்டணி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக, ஐயூஎம்எல் கட்சிகளின் ஆதரவுடன் தவெக பெரும்பான்மையை பெற்றது. தொடர்ந்து தவெகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார்.

இதனையடுத்து சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஜோசப் விஜய் என்ற விஜய் பதவியேற்றார். சி ஜோசப் விஜய் எனும் நான்’ எனக்கூறி விஜய் பதவியேற்றார் அவருக்கு ஆளுநர் ஆர்வி அர்லேகர் பதவியேற்பு பிரமாணம் செய்து வைத்தார். விஜய் கறுப்பு நிற கோட் சூட் அணிந்து முதலமைச்சராக பதவியேற்றார்.

இதனைத் தொடர்ந்து புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, அருண்ராஜ், செங்கோட்டையன்,வெங்கடரமணன்,நிர்மல்குமார், ராஜ்மோகன், டி.கே.பிரபு, கீர்த்தனா ஆகிய 9 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். இந்த நிகழ்ச்சியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள், நடிகை திரிஷா உள்பட பலர் பங்கேற்றனர். முன்னதாக நேரு விளையாட்டரங்கம் வந்த திரிஷாவை, விஜய் குடும்பத்தினர் வரவேற்றனர். இந்த நிலையில், தற்காலிக சபாநாயகராக சோழவந்தான் (தனி) தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *