
தவெக தலைவர் விஜய்.
திருச்சி கிழக்கு, பெரம்பூரில் தவெக தலைவர் விஜய், கோபிச்செட்டிபாளையத்தில் செங்கோட்டையன் போட்டியிடுகின்றனர்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஓட்டலில் இன்று (மார்ச் 29) நடந்த நிகழ்ச்சியில், தவெகவின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டதுடன், வேட்பாளர்களையும் விஜய் அறிமுகப்படுத்தினார். திருச்சி கிழக்கு, பெரம்பூர் ஆகிய இரண்டு தொகுதிகளில் விஜய் போட்டியிடுகிறார். தி.நகரில் புஸ்ஸி ஆனந்த், மயிலாப்பூரில் வெங்கட்ரமணன், வில்லிவாக்கத்தில் ஆதவ் அர்ஜுனா, கோபிசெட்டிப்பாளையத்தில் செங்கோட்டையன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

திருச்செங்கோட்டில் அருண்ராஜ், திருப்பரங்குன்றத்தில் நிர்மல்குமார், எழும்பூர் தொகுதியில் ராஜ்மோகன், ஆர்.கே.நகரில் மரிய வில்சன், குமாரபாளையத்தில் விஜயலெட்சுமி ஆகியோர் போட்டியிடுகின்றனர். தூத்துக்குடியில் நடிகர் ஸ்ரீநாத், திருப்பூர் வடக்கு தொகுதியில் சத்யபாமா, ஆயிரம் விளக்கு தொகுதியில் ஜேசிடி பிரபாகர் போட்டியிடுகின்றனர். 234 வேட்பாளர்களின் பட்டியலை அறிமுகம் செய்ததுடன் தேர்தல் அறிக்கையையும் விஜய் வெளியிட்டார்.



