
வெளியாகியுள்ள கருத்துத் திணிப்புகளை முறியடிப்போம் என்று அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற்றது. பதிவான வாக்குகள் மே 4-ம் தேதி எண்ணப்பட உள்ளன. இந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகின. இதில், NDTV- PEOPLE’S PULSE நடத்திய கருத்துக் கணிப்பில் திமுக கூட்டணி 125 முதல் 145 தொகுதிகள் வெற்றி பெறும் என்று கூறப்படட்து. அத்துடன் அதிமுக கூட்டணி 65 முதல் 80 தொகுதிகளையும், தவெக 18 முதல் 24 தொகுதிகளையும், மற்றவை 2 முதல் 6 இடங்களையும் கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், திமுக கூட்டணி 125 முதல் 145 தொகுதிகளை கைப்பற்றி மீண்டும் ஆட்சியமைக்கும் என REPUBLIC TV P MARQ கணித்துள்ளது. அதிமுக கூட்டணி 65 முதல் 85 இடங்களையும், தவெக 16 முதல் 26 தொகுதிகளையும் கைப்பற்றும் என்றும், மற்றவை 1 முதல் 6 இடங்களைப் பெறும் என்றும் கணித்துள்ளது. இதேபோல், MATRIZE நடத்திய கருத்துக் கணிப்பில் திமுக கூட்டணி 122 முதல் 132 தொகுதிகளும், அதிமுக கூட்டணி 87 முதல் 110 தொகுதிகளையும்,தவெக 10 முதல் 12 தொகுதிகளிலும், மற்றவை 1 முதல் 6 தொகுதிகளிம் வெற்றி பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியைக் கைப்பற்றும் என Times Now JVC கணித்துள்ளது. அதன்படி அதிமுக கூட்டணி 128 முதல் 147 தொகுதிகளிலும், திமுக கூட்டணி 75 முதல் 95 தொகுதிகளிலும், தவெக 8 முதல் 15 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டது. மின்னம்பலம் உள்ளிட்ட பல கருத்துக்கணிப்புகளில் திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
சட்டமன்றக் கருத்துக் கணிப்பு முடிவுகளை அதிமுக தலைமை கடுமையாக விமர்சித்துள்ளது. இது தொடர்பாக அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்களுக்கு எதிரான கருத்துத் திணிப்புகளை முறியடித்து, உண்மையான கணிப்புகளையும் தாண்டி மகத்தான வெற்றியைப் பதிவு செய்வதே அதிமுகவின் வரலாறு. 2011 மற்றும் 2016-ம் ஆண்டு தேர்தல்களில் நிகழ்ந்த வரலாற்றுச் சாதனையை இந்த 2026-ம் ஆண்டுத் தேர்தலிலும் மீண்டும் படைக்கப் போகிறது என்று தெரிவித்துள்ளது.



