ஓய்வூதியப்பலன்கள் அனைவருக்கும் கிடைக்குமா?: முதலமைச்சர் விஜய்க்கு வேண்டுகோள்

ஓய்வூதியப் பலன்களை அனைவருக்கும் கிடைக்கும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓய்வு பெற்ற சாலை ஆய்வாளர் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை ஊரக வளர்ச்சித்துறை ஓய்வுபெற்ற சாலை ஆய்வாளர்கள் நலச்சங்கத்தின் பொதுச்செயலாளர் நா.குமாரகுர வெளியிட்டுள்ள அறிக்கையில், ” மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய தமிழக அரசின் தமிழ்நாட்டு மக்களின் முதலமைச்சர் விஜய் அவர்களுக்கும், சக அமைச்சர்களுக்கும் நெடுஞ்சாலைத்துறை ஊரக வளர்ச்சித்துறை ஓய்வு பெற்ற சாலை ஆய்வாளர்கள் நலச்சங்கத்தின் சார்பாக மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். நல்லதே நடக்கும். வாழ்க வளமுடன்.

ஓய்வு பெற்ற சாலை ஆய்வாளர்களுக்கு அரசாணை எண்: ( G.O (D) MS No.56) 16.3.2018-ல் உள்ள ஓய்வூதியப் பலன்களை அனைவருக்கும் அதிகரித்துக் கிடைக்கச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *