தவெக நிர்வாகிகளால் இளம்பெண் கூட்டுப் பலாத்காரம்: கனிமொழி எம்.பி கண்டனம்

ஸ்ரீவைகுண்டம் அருகே இளம்பெண் தவெக நிர்வாகிகளால் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டதற்கு கனிமொழி எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன். இவர் தமிழக வெற்றி கழகத்தின் தூத்துக்குடி மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக உள்ளார். தமிழக வெற்றிக்கழகத்தில் நிர்வாகியாக உள்ளார். அவரது நண்பர் ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜெயபால். இவரும் தமிழக வெற்றிக்கழகத்தில் நிர்வாகியாக உள்ளார்

இவர்கள் இருவரும் ஏரல் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை வேலை வாங்கி தருவதாக காரில் அழைத்துச் சென்று ராமநாதபுரம் அருகே ஏர்வாடி பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்க வைத்து குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்
பாதிக்கப்பட்ட பெண் இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். இதனையடுத்து பாலமுருகன், ஜெயபால் ஆகியோரை கைது செய்த போலீஸார், பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், குளிர்பானத்தில் மயக்க மருந்தை கலந்து கொண்டு இளம்பெண்ணை தவெக நிர்வாகிகள் கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்தது அதிர்ச்சியளிப்பதாக திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கனிமொழி எம்.பி அவரது எக்ஸ் பக்கத்தில் “ஸ்ரீவைகுண்டம் அருகே பெண் ஒருவர், தவெக நிர்வாகிகள் இருவரால் வேலை வாங்கித் தருவதாக அழைத்துச் செல்லப்பட்டு, மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட செய்தி அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. பெண்கள் பாதுகாப்பு பெரும் கேள்விக்குறியாகியுள்ள இன்றைய சூழலில், தேர்தல் காலத்தைப் போல திமுகவின் மீது பழி போடுவதை நிறுத்திவிட்டு, தாங்கள் தான் ஆளுங்கட்சி என்பதை உணர்ந்து ‘பொறுப்புடன்’ முதலமைச்சர் விஜய் செயல்பட போவது எப்போது?” என கேள்வி எழுப்பி உள்ளார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *